நாங்கள் யார்


சென்னை அலுவலகம் உணவு, வேளாண்மை, ஜவுளி, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், பெட்ரோலியம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை கையாள, MDC-1 ( Marks Department , Chennai -I) என்றும், நுகர் பொருட்கள், கட்டுமானம், மின்துறை, உலோகத்துறை பொருட்கள் போன்றவற்றை கையாள, MDC-2 ( Marks Department II) என்றும் 1988ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. பின்பு MDC -I,CNBO-II ( சென்னை கிளை அலுவலகம் -II) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது CNBO II அதிகார வரம்பும்பின் கீழ்
அனைத்துதுறை சார்ந்த பொருட்களுக்கான
சான்றிதழை கீழ்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றது
  • திருவள்ளூர்
  • செங்கல்பட்டு
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • ராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • கிருஷ்ணகிரி
  • கடலூர் மற்றும்
  • அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
CNBO II வின் கட்டுப்பாட்டில் 800 பொருள் சான்றிதழ் உரிமங்களும் மற்றும் 1100 நகை பதிவு உரிமங்களும் உள்ளன. எஃகு, குழாய்கள், சிமெண்ட், பாதுகாக்கபட்ட குடிநீர் மற்றும் மின் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியாளர்களே எங்களின் முக்கிய பொருள் சான்றிதழ் பெற்ற உரிமையாளர்கள்.
எந்த ஒரு பொருள், உரிமம், வழிமுறைகள் தொடர்பான கேள்விகளுக்கு எங்களை தொலைபேசி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ அணுகவும்.எங்களது BIS CARE App( ஆண்டிராய்டு பிளே ஸ்டோரில் உள்ளது )இதனையும் பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
cnbo2
Skip to contentBIS